உங்கள் அறிவை கண்டு வியக்கிறேன்: எச்.ராஜாவை கிண்டல் செய்த நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடந்த திரையுலகினர்களின் அறப்போராட்டத்தில் சத்யராஜ் பேசியபோது, ராணுவமே வந்தாலும் பயப்பட மாட்டோம். என்று பேசினார். இந்த நிலையில் பாஜக பிரமுகர் எச்.ராஜா தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் போலீசிடம் அடி வாங்கி கொண்டே அவர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டபடி ஒரு இளைஞர் உள்ளார். இதுகுறித்து எச்.ராஜா கூறியபோது 'இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம்' என்று கிண்டலடித்து பதிவு செய்துள்ளார்.
எச்.ராஜா வெளியிட்ட அந்த புகைப்படத்தில் இருப்பவர் நடிகர் செளந்திரராஜா. இவர் சுந்தரபாண்டியன், தர்மதுரை உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் இந்த புகைப்படம் குறித்து நடிகர் செளந்திரராஜா கூறியபோது, 'என்ன சொல்ல... இது மெரினா போராட்டக் களத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். உங்க திறமையைக் கண்டு வியக்கிறேன். வாழ்க ஜனநாயகம்! என்று கிண்டலுடன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து நெட்டிசன்கள் வழக்கமாக எச்.ராஜாவின் அட்மினை சரமாரியாக திட்டி வருகின்றனர். இப்படித் தப்புத் தப்பா எதையாவது போஸ்ட் பண்றதே எச்.ராஜாவோட அட்மினுக்கு வேலையாப் போச்சு!' என்பது போன்ற பல கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com