இன்று பூமிக்கு வந்த ஆசை மகளுக்கு என் முதல் பரிசு: தமிழ் நடிகரின் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று பூமிக்கு வந்த என் ஆசை மகளுக்கு என்னுடைய முதல் பரிசு என தமிழ் நடிகர் ஒருவர் புகைப்படத்துடன் கூடிய ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான சௌந்தரராஜா சமீபத்தில் வெளியான ’ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் சௌந்தரராஜாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் குறிப்பிட்ட நடிகர் சௌந்தரராஜா ’இன்று இந்த பூமிக்கு வந்த என் ஆசை மகளுக்கு என் முதல் பரிசு இந்த மரக்கன்று என்றும் உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதங்களும் என் நெஞ்சார்ந்த நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நடிகர் சௌந்தரராஜாவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த பூமிக்கு வந்த என் ஆசை மகளுக்கு என் முதல் பரிசாக இந்த மரக்கன்று ??
— Soundararaja Actor (@soundar4uall) November 14, 2021
உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி ???? pic.twitter.com/iG81OUnZDs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com