சாப்பிட வழியில்லாம சாகுறத்துக்கு பேரு பட்டினி சாவு இல்ல.. வசனம் எழுதிய எழுத்தாளருக்கு சூரி வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சாப்பிட வழியில்லாம சாகுறத்துக்கு பேரு பட்டினி சாவு இல்ல.. என்ற வசனத்தை எழுதிய எழுத்தாளருக்கு சிறந்த வசனகர்த்தா என்ற விருது தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’கத்துக்குட்டி’ என்ற திரைப்படத்திற்கு சிறப்பாக வசனம் எழுதியதற்காக இரா சரவணன் என்ற எழுத்தாளருக்கு சிறந்த வசனகர்த்தா என்ற விருதை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.
நரேன், ஸ்ருஷ்டி டாங்கே, சூரி உட்பட பலர் நடித்த இந்த படத்தில் நடித்த நிலையில் இந்த படத்திற்கு கதை வசனம் எழுதி இயக்கியவர் எழுத்தாளர் இரா சரவணன். இந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் இரா சரவணனுக்கு நேற்று சிறந்த வசனகர்த்தா விருது ‘கத்துக்குட்டி’ படத்திற்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து இரா சரவணன் தனது சமூக வலைதளத்தில், ‘சாப்பிட வழியில்லாம சாகுறத்துக்கு பேரு பட்டினி சாவு இல்ல... நாலு பேருக்குச் சாப்பாடு போட முடியாம போச்சேன்னு நினைச்சு சாகுறோம் பாரு... அதான் பட்டினி சாவு” - விவசாயிகளின் போர்க்குரலாக முழங்கிய #கத்துக்குட்டி பட வசனத்துக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். துணை நின்ற அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.
இந்த பதிவை அடுத்து நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தபோது, ‘அண்ணே உங்கள் எழுத்து உங்களுடைய மிகப்பெரிய பலம்..அது உங்களை பெரும் உயரங்களுக்கு கூட்டி செல்லும்... வாழ்த்துக்கள் அண்ணே'
அண்ணே உங்கள் எழுத்து உங்களுடைய மிகப்பெரிய பலம்..அது உங்களை பெரும் உயரங்களுக்கு கூட்டி செல்லும்... வாழ்த்துகள் அண்ணே @erasaravanan #கத்துக்குட்டி https://t.co/WZULoDy4iV
— Actor Soori (@sooriofficial) March 5, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments