ஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூரி கடந்த 8 நாட்களாக வீட்டில் இருந்த அனுபவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகனை குளிப்பாட்டுவது போலவும் அவரது மகன் குளிக்கும்போது சேட்டை செய்வது குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதனை அடுத்து அவர் அந்த வீடியோவில் கூறியபோது ’ஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். வீட்டுக்குள் இருந்தால் கொரோனா கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள். அது வாஸ்தவம் தான். ஆனால் வீட்டுக்குள் இருந்தால் இந்த பக்கிகள் தொல்லையை தாங்க முடியாது போலிருக்கிறது. இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்கிறோம். எப்படியாவது அந்த கொரோனாவை வெளக்கமாத்தாலே அடித்து துரத்தி விடுங்கள் என்று கூறினார்.
மேலும் அப்படியே அந்த சீனா பிரதமருக்கு ஒரு போன் போட்டு கொரோனா பிரச்சினைக்கு மூல காரணமாக இருந்த அந்த வவ்வாலையும் பாம்பையும் சாப்பிட்ட பக்கி பயல்களை இனிமேல் சாப்பிடுவியா என வெளக்கமாத்தாலே அடிக்க சொல்லுங்கள். அப்பத்தான் அவர்களுக்கு புத்தி வரும் என்று சூரி கூறினார்.
மேலும் சத்தியமாக சொல்கிறேன் நம்ம வீட்டின் கழிப்பறையைப் கழுவும் போதே நம்முடைய மூச்சு முட்டுகிறது. ஆனால் நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்யும் ஒவ்வொருவரின் கஷ்டம் எப்படி இருக்கும் என்பது இப்போ தான் எனக்கு புரிந்தது. மனதாலும் உடலாலும் உண்மையாகவே சுத்தமானவர்கள் அவர்கள்தான். நீங்கள் எப்போதுமே நன்றாக இருக்கவேண்டும்’ என்று தூய்மைப் பணியாளர்களுக்கும் தனது வணக்கத்தை நடிகர் சூரி தெரிவித்துக் கொண்டார். நடிகர் சூரியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Corona day-8 #corona #lockdown #stayhome #staysafe #stayhealthy pic.twitter.com/Ld8DjlCXgb
— Actor Soori (@sooriofficial) April 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments