இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு: பவுன்ராஜ் மறைவு குறித்து சூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் பொன்ராமின் இணை இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான பவுன்ராஜ் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடித்த ’ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடத்திவரும் டீக்கடையில் வாழைப்பழம் வாங்க வருபவராக நடிகர் பவுன்ராஜ் நடித்திருப்பார். அப்போது வாழைப்பழத்தை வாழைத்தாரில் இருந்து எடுக்கும்போது அந்த கடையே கவிழ்ந்துவிடும். இந்த காமெடி நினைத்து நினைத்துச் சிரிக்கும் வகையில் இருக்கும் என்பதும் இந்த காமெடி இன்னும் பலருக்கு நினைவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் இயக்குனர் பவுன்ராஜ் மறைவு குறித்து நடிகர் சூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு , அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்! அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்’ என்று பதிவு செய்துள்ளார்.
அண்ணன் பவுன்ராஜுடன் நடிச்சது இன்னும் அப்படியே மனசுல பசுமையான நினைவுகளா இருக்கு , அப்படி ஒரு இயல்பான நகைச்சுவை நடிகன்!
— Actor Soori (@sooriofficial) May 15, 2021
அண்ணனின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்?? pic.twitter.com/g8aQI27ADU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com