வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது.. நிலச்சரிவு குறித்து நடிகர் சூரியின் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது இரங்கலை நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு இரவு பகலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சூரியன் தனது சமூக வலைதளத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது
வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது ! நாம் அனைவரும் கொண்டாடிய பசுமையான இடங்கள் எல்லாம் இயற்கை அன்னையின் பெரும் சீற்றத்துக்கு இரையாகி உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் வீடும் வாழ்வாதாரமும் இழந்து உள்ளனர், அங்கிருந்து வரும் காட்சிகள் பார்க்க பார்க்க பகீரென்கிறது!! வயநாடு மக்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.
நாம் அனைவரும் நம்மால் இயன்ற உதவிக்கரம் நீட்ட வேண்டும். இந்த நேரத்தில் களத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் ஈடுப்பட்டு இருக்கும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் அந்த இறைவன் துணை இருக்க வேண்டும், அவர்கள் அனைவருக்கும் பாதம் தொட்ட நன்றிகள்.
வயநாடு செய்திகள் கேட்க கேட்க மனசு பதறுது ! நாம் அனைவரும் கொண்டாடிய பசுமையான இடங்கள் எல்லாம் இயற்கை அன்னையின் பெரும் சீற்றத்துக்கு இரையாகி உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் வீடும் வாழ்வாதாரமும் இழந்து உள்ளனர், அங்கிருந்து வரும் காட்சிகள் பார்க்க… pic.twitter.com/z9meHAUc1q
— Actor Soori (@sooriofficial) August 1, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com