ஸ்டெர்லைட் கொடூரம் குறித்து நடிகர் சூரியின் ஆவேச கருத்து
- IndiaGlitz, [Sunday,May 27 2018]
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 13 பேர் பரிதாபமாக காவல்துறையினர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகமே கண்டனம் தெரிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வழியாக இதுகுறித்து கருத்து கூறிய காமெடி நடிகர் சூரி கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நம்முடைய பக்கத்து நாட்டில் தமிழர்கள் லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். பக்கத்து நாடு என்பதால் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை
ஆனால் இப்போது நம்முடைய நாட்டில் நம்முடைய மாநிலத்தில் நம்முடைய ஊருக்கு அருகிலேயே தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன ஜாதிச்சண்டை, மதச்சண்டையா போடுகிறார்கள்? அவர்கள் சுவாசிக்க நல்ல காற்று வேண்டும் என்று கேட்டு போராடுகிறார்கள். வருங்கால சந்ததியினர்களுக்காக போராடுகின்றனர். தண்ணீர் இல்லை என்றால் கூட பக்கத்து மாநிலத்தில் வாங்கி கொள்ளலாம். காற்றை எங்கே போய் வாங்குவது? இருபது வருடங்களாக நல்ல மூச்சுக்காற்றுக்காக போராடியவர்களின் மூச்சை நிறுத்தியது பெரிய கொடுமை' என்று நடிகர் சூரி தனது ஆவேசமாக கருத்தை தெரிவித்துள்ளார்.