லைட்டா தலைவர் சாயல் தெரியுதே: அட.. நம்ம சூரியா.. மதுரை டு லாஸ் ஏஞ்சல்ஸ்..

  • IndiaGlitz, [Saturday,July 13 2024]

நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைட்டா தலைவர் சாயல் தெரியுதே என்பது உட்பட ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரை உலகின் காமெடி நடிகராக ஜொலித்து வந்த சூரி, சமீப காலமாக ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது தெரிந்தது. அவர் ஹீரோவாக நடித்த வெற்றிமாறனின் ’விடுதலை’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான ’கருடன்’ திரைப்படமும் வசூலில் சாதனை செய்தது. இந்த நிலையில் அவர் ’விடுதலை 2’ ‘கொட்டுக்காளி’ உள்பட ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இனி அவர் தொடர்ச்சியாக ஹீரோவாக தான் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் சூரி தனது இன்ஸ்டா பக்கத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

’யாரெல்லாம் ஒரு நிமிஷம் ரஜினி சார் என்று நினைத்தீர்கள்’ என்றும் ’சாதிக்க பிறந்தவனின் சத்தம் பெரிதாக தான் இருக்கும்’ என்றும் ’நம்ம பரோட்டா சூரி அண்ணாவா இவர்? கருடன் படத்தில் செமயா நடித்திருக்கிறார்’ என்றும் ’அடையாளமே தெரியவில்லை, லைட்டா தலைவர் சாயல் தெரிகிறது’ என்றும், ’மதுரை டு லாஸ் ஏஞ்சல்ஸ்’ என்றும் பலவிதமான கமெண்ட்கள் பதிவாகி இருக்கிறது.

 

More News

சமையல் அறையில் நச்சு பொருட்களை வைத்துள்ளோம்.. பிரேம்ஜி மனைவியின் அதிர்ச்சி பதிவு..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜியின் மனைவி இந்து தனது சமூக வலைதளத்தில் சமையல் அறையில் நாம் வைத்திருக்கும் பெரும்பாலான பொருட்கள் உடலுக்கு

'கைதி 2' படத்தில் நிச்சயம் LCU படம் தான்.. யார் யார் இருக்கிறார்கள்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி

'இந்தியன் 2' முதல் நாள் வசூல் எவ்வளவு? 'விக்ரம்' முதல் நாள் வசூலை முறியடித்ததா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலும் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன

'நான் என்ன சீரியல் கில்லரா? பிரசாந்த் நடித்த 'அந்தகன்' டீசர்..!

பிரசாந்த் நடித்த 'அந்தகன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது தான் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

தமிழ் திரையுலக ஹீரோவுக்கு திருமணம்.. திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் வாழ்த்து..!

தமிழ் திரை உலகின் ஹீரோவுக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.