டிவி முன் துள்ளி குதித்த நடிகர் சூரி: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூரி டிவி முன் துள்ளி குதித்த வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 33வது போட்டி நேற்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 155 ரன்கள் எடுத்ததை அடுத்து 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது.
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் விக்கெட் விழுந்தது. 2-வது பந்தில் 1 ரன் மட்டுமே பிராவோ எடுத்த நிலையில் 4 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில் 3 பந்துகளில் 12 ரன்கள் அடித்த தல தோனி, கடைசி பந்தில் பவுண்டரி அடித்தால் வெற்றி என்ற நிலையில் அசத்தலான ஒரு பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இந்த போட்டியை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த நடிகர் சூரி, கடைசி பந்தில் தல தோனி பவுண்டரி அடித்ததும் துள்ளிக்குதித்து ’நம்ம தல நம்ம தல தான்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Thala thalathan #msd #MSDhoni #csk #yellove #ipl2022 #BCCI #ipl pic.twitter.com/8eST2IYdwM
— Actor Soori (@sooriofficial) April 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments