close
Choose your channels

நடிகர் சூரிக்கு என்ன ஆச்சு? கையில் கட்டுடன் இருக்கும் அதிர்ச்சி வீடியோ..!

Friday, January 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூரி சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த நிலையில் கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சூரி தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் முக்கிய இடத்தில் நடித்த ’விடுதலை’ ரிலீசாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது ‘விடுதலை 2’ ’கருடன்’ ’கொட்டுக்காளி’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்

இந்த நிலையில் ’கருடன்’ படத்தின் டப்பிங் பணி செய்யும் வீடியோவை சூரி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் அவர் டப்பிங் பேசும் போது கையில் கட்டுடன் உள்ளார். அந்த காயம் அவர் சமீபத்தில் படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

சூரி மற்றும் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ரோஷினி ஹரிப்பிரியன், சமுத்திரகனி, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய இந்த படத்தின் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுத, ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment