ஜெயிலருக்காக ரஜினிக்கு கிடைத்த அதே பிஎம்டபிள்யூ கார்.. காசு கொடுத்து வாங்கி சூரி அசத்தல்..!

  • IndiaGlitz, [Friday,October 06 2023]

’ஜெயிலர்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய பிஎம்டபிள்யூ கார் பரிசளித்தது என்பது தெரிந்ததே. அதே மாடல் பிஎம்டபிள்யூ காரை நடிகர் சூரி காசு கொடுத்து வாங்கி உள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் சூரி 1998 ஆம் ஆண்டு ’மறுமலர்ச்சி’ என்ற திரைப்படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் ’சங்கமம்’ உள்பட ஒரு சில படங்களில் பிரபலமாகாத கேரக்டரில் நடித்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக காமெடி கேரக்டரில் நடித்தார்.

நடிகர் சூரிக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்த படம் ’வெண்ணிலா கபடி குழு’ என்ற படம் தான் என்பதும் அதில் பரோட்டா சாப்பிடும் கேரக்டரில் நடித்த நிலையில் அவரை பரோட்டா சூரி என்று சில ஆண்டுகள் அழைத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அஜித், விஜய் உட்பட பல பெரிய நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து இன்று ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் வைத்துள்ள நடிகர் சூரி தற்போது பிஎம்டபிள்யூ கார் வாங்கியதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரருக்கு ஜாமீன்.. ஆனால் நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் 90களின் ஹீரோயின்.. யோகி பாபுவுக்கு அம்மா கேரக்டர்..!

கடந்த 90களில் ரசிகர்களின் மனதில் குடியிருந்த நடிகை, நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், அவர் யோகி பாபு அம்மா கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சிறகடிக்க ஆசை: முத்து குடும்பத்தில் இன்னொரு சிக்கல்..  சுருதியால் மீனாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் டாப் 10  டிஆர்பியில் வந்துவிட்டது

ஜோவிகாவுக்கு இவ்வளவு கோபம் வருமா? விசித்ராவுடன் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர் என்பதை பார்த்தோம்

தளபதி விஜய் மிகவும் வருத்தப்பட்டார்.. இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கு: தயாரிப்பாளர் லலித்..!

'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் தளபதி விஜய் மிகவும் வருத்தப்படுவதாகவும் எனவே இந்த படத்தின் ஒரு புரமோஷன் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் விரைவில்