நெகிழ வைக்கும் நடிகர் சோனு சூட்டின் மனிதநேயம்… வைரலாகும் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய மொழி படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் சோனு சூட். அடிப்படையில் பாலிவுட் நடிகரான இவர் கொரோனா நேரத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவியிருந்தார். இதனால் இந்தியா முழுக்கவே கொண்டாடப்படும் ஒருவராகவும் மாறியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சோனு சூட் பஞ்சாப் மாநிலம் மோகா நகருக்கு அருகே சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த ஒரு கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. கிட்டத்தட்ட எரிந்து கொண்டிருந்த அந்தக் காரில் ஒருவர் சிக்கிக் கொண்டபோது அந்தக் காரை உடனடியாக நெருங்கிய சோனு சூட் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
கார் எரிந்து கொண்டிருந்த நிலையில் நடிகர் சோனு சூட் செய்த இந்தக் காரியம் குறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகர் சோனு விபத்துக்குள்ளான நபரை தன்னுடைய கையாலேயே சுமந்து மருத்துவமனையில் சேர்த்தது குறித்து ரசிகர்கள் பலரும் தங்களது நெகிழ்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்.
Every Life Counts ??@SonuSood pic.twitter.com/veu5M6fcqU
— Sood Charity Foundation (@SoodFoundation) February 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments