தமிழ் மாணவர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்த சோனு சூட்: ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,August 05 2020]

திரையில் வில்லன் நடிகராக இருந்தாலும் நிஜத்தில் தற்போது ஹீரோவாக மாறி விட்டார் நடிகர் சோனு சூட் என்பதை பல நிகழ்வுகளின் மூலம் பார்த்தோம். குறிப்பாக மகள்களை வைத்து ஏர் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தது, சாப்ட்வேர் இன்ஜினியர் பணியை இழந்து காய்கறி வியாபாரம் செய்த இளம்பெண்ணுக்கு சாப்ட்வேர் இன்ஜினியர் பணி வாங்கிக் கொடுத்தது, தனது பிறந்தநாளின் போது ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாங்கிக் கொடுத்தது, புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக தனது சொந்த பணத்தில் வாகனங்களை ஏற்பாடு செய்தது என சோனு சூட் செய்த உதவிகளை சொல்லிக்கொண்டே போகலாம்

இந்த நிலையில் தற்போது ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்க சென்ற தமிழ் மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களுக்காக தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

ஊரடங்கு காரணமாக ரஷ்யாவில் எம்பிபிஎஸ் படிக்க சென்ற தமிழ் மாணவர்கள் 90க்கும் மேற்பட்டோர் நாடு திரும்ப முடியாமல் இருப்பது குறித்த செய்தி அறிந்த சோனு சூட், உடனடியாக அவர்கள் அனைவரும் தமிழகம் திரும்புவதற்காக தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்தார். இந்த தனி விமானம் ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து கிளம்பி நேற்றிரவு சென்னைக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் மாணவர்கள் அனைவரும் பத்திரமாக வந்து சேர்ந்ததை அடுத்து தாய்நாடு திரும்பிய அனைத்து தமிழ் மாணவர்களும் நடிகர் சோனு சூட் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

More News

கொரோனா கற்றுத்தந்தது என்னென்ன? பிரபல இயக்குனரின் டுவீட்

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் கொரோனா வைரஸால் வைரஸிடம் சிக்கி மனித இனமே தவித்து வருகிறது

காதலிக்கு சர்பரைஸ் கொடுக்க நினைத்து வீட்டையே கொளுத்திய இளைஞர்!!! சுவாரசியத் தகவல்!!!

இங்கிலாந்தின் தெற்கு யார்க்க்ஷர் மாகாணத்தின்  அபேடலி பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த ஒரு இளைஞர் தனது காதலிக்கு சர்பரைஸ் கொடுத்து லவ் பிரபோஸ் செய்ய நினைத்திருக்கிறார்.

லெபனானில் வெடித்து சிதறிய 2,750 டன் அமோனியம் நைட்ரேட்!!! பரபரப்புச் சம்பவம்!!!

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் அருகேயுள்ள துறைமுகத்தில் ஏற்ட்ட ஒரு வெடிவிபத்தால் ஒட்டுமொத்த தலைநகரும் தற்போது ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தனிமை: பிரத்யேக முறையில் அம்மா கோவிட்-19 திட்டத்தைத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்!!!

தமிழகத்தில் கடந்த ஜுலை மாதத்தைவிட கொரோனாவில் இருந்து குணமடைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற காமெடி நடிகரின் மகன்: முதல் முயற்சியிலேயே தேர்ச்சி

பொதுவாக சினிமா நடிகர் நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி வெற்றி பெற்று வரும் நிலையில் பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் முதல்