இந்த நடிகரை புகழ்ந்து புகழ்ந்து வாயே வலிக்குது: நெட்டிசன்கள் புலம்பல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் அனைத்து இந்திய மக்களின் மனதிலும் ஹீரோவாக புகழப்பட்டவர் வில்லன் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவி இன்னும் பல ஆண்டுகளுக்கு மறக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் பல குடும்பங்களுக்கு அவர் உதவி செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தினந்தோறும் சோனு சூட் செய்த உதவியை புகழ்ந்தும் பாராட்டியும் பல்வேறு பதிவுகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் மீண்டும் ஒரு உதவியை செய்துள்ளது குறித்த செய்தி வெளி வந்துள்ளது
சமீபத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சோனு சூட், அந்த படத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் பொருளாதார ரீதியில் பின்தங்கி நிலையில் இருப்பதாகவும் அவர்களின் குழந்தைகள் ஆன்லைன் மூலம் பள்ளி பாடங்களை கவனிக்க ஸ்மார்ட்போன் கூட இல்லாமல் தவித்து வருவதையும் கேள்விப்பட்டார். இதனையடுத்து உடனடியாக சோனு சூட் 100 ஸ்மார்ட்போன்களை வாங்கி அவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்
சோனுசூ செய்த இந்த உதவியை அடுத்து படக்குழுவினர் அனைவரும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இந்த நடிகரை புகழ்ந்து புகழ்ந்து வாயெல்லாம் வலிக்கிறது, அவ்வளவு உதவிகளை செய்து கொண்டிருக்கிறார், வாழ்த்துக்கள்’ என்று நெட்டிசன்கள் மகிழ்ச்சியுடன் புலம்பி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com