சிவகுமாரின் மற்றொரு பிரமிக்க வைக்கும் சமூக சேவை
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவகுமாரின் குடும்பம் கலைக்குடும்பம் மட்டுமின்றி சமூக சேவையிலும் சிறந்து விளங்கும் குடும்பம் என்பது தமிழகமே அறிந்ததுதான். அகரம் பவுண்டேஷன் மூலம் எண்ணற்ற குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் சுற்றுப்புற தூய்மையிலும் தற்போது இந்த குடும்பம் ஈடுபட்டுள்ளது.
நடிகர் சிவகுமார் சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச்சிறந்த ஓவியர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய சுவர்களில் சுமார் 1000 மாணவர்களுடன் இணைந்து சிவகுமார் பிரமிக்க வைக்கும் ஓவியங்களை வரைந்து வருகிறார். சிவகுமாரின் மகளும் ஓவியக்கலை பயின்றவருமான பிருந்தாவும் இந்த பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் தற்போது வெயில் கொளுத்திக்கொண்டிருக்கும் நிலையிலும் சுமார் நான்கு மணி நேரம் சிவகுமார் தனது குழுவினர்களுடன் இணைந்து ரயில் நிலைய சுவர்களை பாதுகாக்கும் வகையிலும் கண்களுக்கு குளுமையை ஏற்படுத்தும் வகையில் செய்த இந்த சமூக பணியை பலரும் பாராட்டு வருகின்றனர். சிவகுமாரின் இந்த சீரிய முயற்சிக்கு நமது சார்பிலும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com