25 வருஷம் ஆச்சு இப்படி ஒரு படம் பார்த்து! சிவகுமார்

  • IndiaGlitz, [Thursday,November 16 2017]

இயக்குனர் கோபி நயினார் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அனைத்து தரப்பினர்களின் பாராட்டையும் பெற்று வருகிறது. குறிப்பாக நயன்தாராவுக்கு இந்த படம் ஒரு மைல்கல் என்றே கூறலாம்.

இந்த நிலையில் பழம்பெரும் நடிகர் சிவகுமார் நேற்று இந்த படத்தை பார்த்து, இயக்குனர் கோபியையும், படக்குழுவினர்களையும் வரவழைத்து பாராட்டினார். 25 வருஷம் ஆச்சு இப்படி ஒரு படம் பார்த்து, அசத்திட்டிங்க' என்று இயக்குனர் கோபியிடம் சிவகுமார் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சிவகுமாரின் வார்த்தைகள் படக்குழுவினர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவமாக பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் சிவகுமார் தனது கையால் வரைந்த மகாத்மா காந்தி ஓவியத்தை தனது நினைவுப்பரிசாக இயக்குனர் கோபிக்கு வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.