close
Choose your channels

'தர்மதுரை' இயக்குனருக்கு சிவகுமார் எழுதிய நெகிழ்ச்சியான கடிதம்

Friday, September 2, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பல கோலிவுட் பிரபலங்கள் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சூர்யா, கார்த்தியின் தந்தையும், பழம்பெரும் நடிகருமான சிவகுமார், 'தர்மதுரை' படத்தை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது:
சீனுராமசாமி முழுமையான படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்திய படம் தர்மதுரை. விஜய்சேதுபதி எல்லாதரப்பு மக்களின் இதயத்திலும் இடம் பிடிக்கும் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றார். படிப்பில் ஜெயித்து வாழ்க்கையில் தோற்ற ஒரு டாக்டரின் திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை, திரையில் விரிகிறது.
காமராஜரின் மதிய உணவு திட்டத்தில் பசிபோக்கிய ஏழை சிறுவன், மருத்துவ கல்லூரி பேராசிரியராகி காமராஜர் பெயரையே தனக்கு சூட்டிக்கொண்டது நெஞ்சில் நிலைக்கும் காட்சி. ஏழை மக்களின் வரிப்பணத்தில் படித்து டாக்டரானவர்கள் கிராமத்து ஏழைகளுக்கு வைத்தியம் செய்து நன்றிக்கடன் அடைக்க வேண்டும் என்ற தத்துவம் மருத்துவர்களுக்கு பாடம்.
தனக்கு தெரியாமல் தன் கருவை கலைத்த டாக்டர் கணவனை தமன்னா விவாகரத்து செய்வதில் உள்ள நியாயம், கல்லூரியில் கதை ஆரம்பித்தவுடன் படம் முடியும் வரை அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாத திருப்பங்கள். சீனுராமசாமி, வெல்க ராமசாமி
இதுக்கும் மேலே..மேலே உங்களிடம் எதிர்பார்க்கிறோம்
இவ்வாறு நடிகர் சிவகுமார் தன்னுடைய கடிதத்தில் எழுதியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment