முன்னணி நடிகருக்கு விவசாயிகள் விருது… பாராட்டி மகிழும் ரசிகர்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதோடு தமிழின் முன்னணி நடிகராகவும் உயர்ந்து இருக்கிறார். இவர் முக்கிய நடிகர்களின் வரிசைக்கு வந்தப் பின்னரும் எளிமையான தோற்றத்தோடும் அதே நெகிழ்ச்சியோடும் எப்போதும் காட்சி அளிக்கிறார். மேலும் இவருடைய சினிமா செயல்திட்டங்கள் கூட எளிய மனிதர்களோடு கைக்கோர்க்கும் வகையிலேயே அமைந்து இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் பல ஏழை எளிய மாணவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் கொரோனா நேரத்தில் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்தது, உடல்நலம் குன்றிய நடிகர் தவசிக்கு உதவ முன்வந்தது. அதேபோல அண்மையில் நெல் ஜெய்ராமன் மகனின் படிப்பு செலவை ஏற்றது என்று இவரின் செயல்கள் அனைத்தும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விவசாயிகளின் விருதான நம்மாழ்வார் விருது வழங்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்பட இருக்கிறது. அந்த விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன.
தமிழக பாரம்பரிய விவசாயிகளின் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் இந்த விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதிலும் இவரின் சேவை மனப்பான்மைக்கு வழங்கப்படும் விருது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் எழுந்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com