சீமான் கூட முதல்வர் ஆகலாம்? நடிகர் சிங்கமுத்துவின் பிரத்யேக பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகச் சட்டச்சபை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களத்தைப் பற்றியும் ஒவ்வொரு கட்சியும் செய்து வருகின்ற வேலைப்பாடுகளைப் பற்றியும் அரசியல் பிரமுகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவில் செயல்பட்டு வரும் நடிகர் சிங்கமுத்து தமிழக அரசியல் களத்தின் நிலைப்பாடு குறித்தும் ஒவ்வொரு கட்சியின் தற்போதைய நிலைமை குறித்தும் பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார்.
அந்தப் பேட்டியில் மக்கள் விரும்புபவர்கள்தான் தமிழக முதல்வராக வரமுடியும். ஏன் மக்கள் சீமானை விரும்பினால் கூட அவர் முதல்வராக வரமுடியும். அவர் நல்ல பேச்சாளர். சமூகத்திற்காக சிந்திக்கக் கூடியவர். தனிக் கொள்கையில் நின்று வேலை செய்து வருகிறார். ஒருவேளை பெரிய கட்சிக்குள் இருந்து வலுப்பெற்று பின்னர் தமிழக அரசியலில் இடம்பெற்றால் பெரிய வளர்ச்சியைப் பெறமுடியும் என்பது போன்ற பல்வேறு கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அடுத்து திமுக தற்போதைய அரசியல் களத்தில் சில சர்ச்சைகளை சந்தித்து வருவது குறித்தும் அவர் தன்னுடைய விமர்சனத்தை எடுத்துக் கூறினார். மேலும் அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி நிலைமைகள் எப்படி இருக்கிறது? கட்சிக்குள் ஒற்றுமை மனப்பாங்கு இருக்கிறதா? அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் எப்படி இருக்கும்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
நடிகர் சிங்கமுத்து தான் பகிர்ந்து கொண்ட பதில்களில் மிக எளிமையும், தனக்கே உரிய தனிப்பட்ட பாணியும் இருந்தது. தமிழகச் சட்டச்சபை தேர்தல் சூடுபிடித்து இருக்கும் நிலையில் நடிகர் சிங்கமுத்து பார்வையில் தமிழக அரசியலில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது? என்ன நடக்க போகிறது? போன்ற அனுமானங்களை பெற்று கொள்ள முடியும். அந்த வகையில் இந்த வீடியோ பல்வேறு தரப்புகளில் வரவேற்பை பெற்றுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments