உனக்கு லவ்லி மேன்… எனக்கு? புலம்பும் நடிகர் சிம்புவின் வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,March 08 2021]

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து பொங்கலுக்கு ரிலீசான “ஈஸ்வரன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குநர் வெங்கட் பிரபுவின் “மாநாடு” படத்தில் நடிகர் சிம்பு கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்திற்காக தன்னுடைய உடல் எடையை மிகவும் குறைத்து, நடிகர் சிம்பு ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டி இருந்தார். அவரின் வேற லெவல் டிரான்ஸ்பர்மேஷனைப் பார்த்து பலரும் வியப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

அந்த வகையில் தொடர்ந்து வொர்க் அவுட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வரும் நடிகர் சிம்பு தன்னுடைய பயிற்சியாளருடன் இணைந்து வொர்க் அவுட் செய்யும் வீடியோ காட்சிகள் அவ்வபோது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பாராட்டைப் பெற்று வருகிறது. தற்போது அப்படி ஒரு வீடியோவை நடிகர் சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் தீவிரமாக வொர்க் அவுட் செய்யும் நடிகர் சிம்பு தன்னடைய பயிற்சியாளரைப் பார்த்து உனக்கு லவ்லி மேன், எனக்கு எங்க லவ்லி? எனச் சலித்துக் கொள்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“மாநாடு ” படத்திற்கு இடையே நடிகர் சிம்பு “பத்து தல“, அதோடு இயக்குநர் கவுதன் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ள புது படம் ஒன்றிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆம் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சமீபத்தில் “நதிகளிலே நீராடும் சூரியன்” எனப் படக்குழு பெயர் வைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

More News

எங்க வீட்டோட 'மதுரை வீரன்' எங்கப்பா தான்: ஷிவாங்கியின் கலகலப்பான பேட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் ஷிவாங்கி உலகம் முழுவதும் புகழ் பெற்றது 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியில்தான்.

பிக்பாஸ் யாஷிகாவின் படத்தில் வில்லனாகும் பிரபல இசையமைப்பாளர்!

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடிக்க இருக்கும் படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இந்த மாஸ் நடிகர் வில்லனா? 

பிரபல நடிகர்கள் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். ஏற்கனவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, வினய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஹீரோக்கள் வில்லனாக

அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்த கமல், ரஜினி பட நாயகி!

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது கமல் ரஜினி உள்பட பல முன்னணி

அகில இந்திய அளவில் அஜித்துக்கு கிடைத்த பெருமை: கொண்டாடும் ரசிகர்கள்

தல அஜித் நடிகராக மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் ரேஸ், கார் ரேஸ் உள்ளிட்ட பல துறைகளில் தனது முத்திரையை பதித்து இருக்கிறார் என்று அவ்வப்போது வெளிவந்த செய்திகளை பார்த்திருக்கிறோம்.