'சுறா' படத்தை ரிஜக்ட் செய்து இந்த படத்தை தேர்வு செய்தேன்: சூப்பர்ஹிட் படம் குறித்து சிம்பு

'சுறா’ என்ற திரைப்படத்தை ரிஜக்ட் செய்துவிட்டு இந்த படத்தை தேர்வு செய்தேன் என சிம்பு நடித்த சூப்பர் ஹிட் படம் குறித்த தகவலை அவர் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் ஒரு சிலர் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்த போதிலும் முதல் நாள் இந்த படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவான முதல் படம் ’விண்ணைத்தாண்டி வருவாயா'. இந்த படத்தின் கதையை கூறுவதற்கு முன்னர் ஒரு அதிரடி ஆக்ஷன் கதையை கவுதம் மேனன் தன்னிடம் கூறியதாகவும் அந்த படத்திற்கு 'சுறா’ என்ற டைட்டில் வைத்திருப்பதாகவும் சிம்பு தனது பேட்டியில் தெரிவித்தார்.

ஆனால் தற்போதைக்கு ஆக்சன் படம் வேண்டாம், ஒரு ரொமான்ஸ் படம் பண்ணலாம் என்று நான் கவுதம் மேனனிடம் கூறியதை அடுத்து அவர் ‘ஜெஸ்ஸி’ என்ற படத்தின் கதையை தன்னிடம் கூறினார் என்றும் அந்த படம்தான் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படமாக உருவானது என்றும் சிம்பு அந்த பேட்டியில் கூறியுள்ளார்

More News

'நானே வருவேன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்: ரிலீஸ் எப்போது?

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலைபுலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன்'.

பீச் தான் என் பயிற்சியாளர்.. மாலத்தீவில் அமலாபாலின் வேற லெவல் போஸ்!

தமிழ் நடிகைகள் பலர் தற்போது மாலை தீவு சென்றுள்ளனர் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் தமிழ் நடிகை.. வீடியோ வைரல்

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஹனிரோஸ் வேற லெவல் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில்

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த ஸ்பெஷல்: அஞ்சலியின் 'ஃபால்' வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, 'ஃபால் '( Fall ) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. 'வெர்டிஜ்'  (Vertige) என்ற விருது பெற்ற கனடிய மினி வெப் சீரிஸின்

'வெந்து தணிந்தது காடு' ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்: எப்போது ரிலீஸ்?

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.