தாடி பாலாஜி குடும்பத்தை இணைக்க சிம்பு எடுத்த முயற்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி நடிகர் தாடி பாலாஜியும், அவருடைய மனைவி நித்யாவும் சமீபத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யா தனது கணவர் பாலாஜி மீது போலீஸ் புகார் கொடுக்க தற்போது வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருக்கும் பாலாஜியையும் அவரது மனைவியையும் சமாதானப்படுத்தி சேர்ந்து வாழ வைக்கும் முயற்சியில் சிம்பு ஈடுபட்டுள்ளார்
பாலாஜியின் மனைவி நித்யாவிடம் சமீபத்தில் போனில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பேசிய நடிகர் சிம்பு இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், உங்களுக்காக இல்லை என்றாலும் குழந்தைக்காக பாலாஜி செய்த தவறுகளை மன்னித்து மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், இது எனது வேண்டுகோள் என்றும் கூறியதாக நித்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சிம்பு நடித்த ஒரு படத்தில் கூட பாலாஜி நடித்ததில்லை. இருப்பினும் எங்கள் இருவரின் பிரச்சனைகளை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வந்த சிம்பு தற்போது சேர்த்து வைக்க முயன்றதாகவும், பாலாஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் இதுகுறித்து யோசிப்பதாக தான் கூறியதாகவும் நித்யா அந்த பேட்டியில் கூறியுள்ளார். பிரிந்த ஒரு குடும்பத்தை சேர்த்து வைக்க சிம்பு செய்த முயற்சி பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments