'குக் வித் கோமாளி' அஸ்வினுக்காக சிம்பு செய்த உதவி: வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அதன் பின்னர் ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற படத்தில் நடித்த அஸ்வினுக்கு சிம்பு செய்த உதவி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின், ‘என்ன சொல்லப்போகிறாய்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் 40 கதைகளை கேட்டு தூங்கிவிட்டேன் என்று கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது என்பதும், இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே ஒருசில ஆல்பங்களில் நடித்துள்ள அஸ்வின் தற்போது ’பேபி நீ சுகர்’ என்ற ஆல்பத்தில் நடித்துள்ளார். இந்த ஆல்பத்தில் அஸ்வினுடன் லாஸ்லியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும், ஏராளமான குழந்தைகள் இந்த ஆல்பத்தில் க்யூட்டாக டான்ஸ் ஆடியுள்ளனர் என்பதும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த பாடலை சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ‘இந்த பாடலை வெளியிடுவதில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். சிம்புவின் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் இந்த பாடலின் வெற்றியின் மூலம் மீண்டும் அஸ்வின் திரையுலகில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாடல் மிகவும் கலர்புல்லாக இருப்பதாகவும் குறிப்பாக அஸ்வின் மற்றும் லாஸ்லியா கெமிஸ்ட்ரி சூப்பராக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த பாடல் குழந்தைகளை கவர வேண்டும் என்பதற்காக கடவுள் போன்ற மேக்கப் போட்ட குழந்தையின் நடிப்பும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. ஓஷோ வெங்கட் என்பவர் என்ற பாடலை பாடி இசையமைத்துள்ளார் என்பதும் சாண்டி இந்த பாடலுக்கு நடன இயக்கம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Happy to release the ultra peppy #BabyNeeSugar music video *ing @i_amak #Losliya #Vriddhi @sonymusicsouthhttps://t.co/Qq5PNcFiwk@SGCMedia22 #MagVen @mahiram20 @iamSandy_Off @iamvenkat6 @osho_venkat @aparajalyrics @soorajnallusami @Rubinisakthi @gojo_editor @onlynikil pic.twitter.com/4MWAivOB0L
— Silambarasan TR (@SilambarasanTR_) March 30, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments