Gen Z மோடில் அடுத்த படம்.. சிம்பு அறிவிப்பால் ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Sunday,October 20 2024]

நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை அறிவித்துள்ளார், இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தற்போது கமல்ஹாசனுடன் தக்ஃலைப் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாகத் தெரிகிறது.

இது மட்டுமின்றி, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், STR 48 என்ற தலைப்பில் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், டிராகன் என்ற படத்தை இயக்கி வரும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில், 2000-களில் நடித்த ’தம்’ மன்மதன், வல்லவன், ’விடிவி’ போன்ற Gen Z படங்களை குறிக்கும் வகையில் நம்முடைய அடுத்த படம் இருக்கப் போகிறது என்று பதிவு செய்துள்ளார். இந்த படம் அவரது 50வது படமாக இருக்கும் என்றும், அவரே இந்தப் படத்தை இயக்க இருப்பதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News

கேட்ட கேள்விக்கான பதிலை சொல்லுங்க.. தர்ஷா குப்தாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய விஜய் சேதுபதி எபிசோடு வழக்கத்தை விட சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'ஆனந்தம்'.. ஆன்மீக பயணத்தில் 'சீதாராமம்' நடிகை.. பக்திமயமான புகைப்படங்கள்..!

ஆனந்தம் என்ற தலைப்பில் ஆன்மீக பயணம் செய்த புகைப்படங்களை 'சீதாராமம்' நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த பக்தி மயமான புகைப்படங்கள்

அருண் விஜய்யின் அடுத்த படம்.. சூப்பர் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

நடிகர் அருண் விஜய் நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து, படக்குழுவினர் ஒரு சூப்பர் வீடியோவை வெளியிட்டுள்ளனர், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள்.. பில்லியன் கணக்கில் பார்வை நிமிடங்கள்.. பிக்பாஸ் தமிழ் 8 மாபெரும் வெற்றி..

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 அக்டோபர் 6ஆம் தேதி பிரம்மாண்டமான 5 மணி நேர துவக்க விழாவுடன் துவங்கியது. புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய

பிரேக்கிங் பாயிண்டை தொட்டதுக்கு அப்புறம் யாராலும் அடிக்க முடியாது: 'லியோ' 8 நிமிட வீடியோ..!

தளபதி விஜய் நடித்த "லியோ" திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறும் நிலையில், இது குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்திருந்தார்