Gen Z மோடில் அடுத்த படம்.. சிம்பு அறிவிப்பால் ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை அறிவித்துள்ளார், இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, தற்போது கமல்ஹாசனுடன் "தக்ஃலைப்" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக இருப்பதாகத் தெரிகிறது.
இது மட்டுமின்றி, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், "STR 48" என்ற தலைப்பில் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், "டிராகன்" என்ற படத்தை இயக்கி வரும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில், 2000-களில் நடித்த ’தம்’ "மன்மதன்," "வல்லவன்," ’விடிவி’ போன்ற Gen Z படங்களை குறிக்கும் வகையில் நம்முடைய அடுத்த படம் இருக்கப் போகிறது" என்று பதிவு செய்துள்ளார். இந்த படம் அவரது 50வது படமாக இருக்கும் என்றும், அவரே இந்தப் படத்தை இயக்க இருப்பதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Dum + Manmadhan + Vallavan + Vtv
— Silambarasan TR (@SilambarasanTR_) October 19, 2024
in Gen Z mode = NAMBA NEXT !!! ❤️🔥
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments