'ஜல்லிக்கட்டு' குறித்து சிம்புவின் தைரியமான கருத்து

  • IndiaGlitz, [Friday,December 30 2016]

சிம்பு என்றாலே ஒளிவு மறைவு இல்லாமல் மனதில் பட்டதை எதிர்விளைவுகள் குறித்து கவலைப்படாமல் பேசுபவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழகத்தின் உணர்ச்சிகரமான பிரச்சனையான ஜல்லிக்கட்டு குறித்து அவர் தனது கருத்தை மிகவும் தைரியமாக பதிவு செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட் தடை காரணமாக ஜல்லிக்கட்டு இந்த ஆண்டாவது நடைபெறுமா என ஒட்டுமொத்த தமிழர்களும் ஏங்கியிருக்கும் நிலையில் சிம்புவின் இந்த கருத்து ஆறுதலான ஒன்றாக உள்ளது. சிம்பு கூறியதன் விபரம் இதுதான்:

"ஜல்லிக்கட்டு தமிழனின் கலாச்சார அடையாளம். இந்த வீர விளையாட்டு நமது வாழ்வில் ஒருங்கிணைந்து பயணித்து வந்துள்ளது. எதோ சில தனிப்பட்ட நபர்களும், சில தன்னார்வ அமைப்புகளும் தங்களுடைய விலாச தேவைக்காக அதிகாரத்தில் இருப்போரையும், நீதித் துறையையும் தவறான தகவல்கள் மூலம் வழி நடத்தி நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை நடத்த விடாமல் செய்கின்றனர்.

அரசும், நீதித் துறையும் கடினமாக, கண்டிப்பாக நடந்துகொள்ள பல்வேறு கொழுந்துவிட்டு எரியும் பிரச்சினைகள் இருக்கும்போது, ஜல்லிக்கட்டை தடை செய்வதுதான் முக்கிய கடமை என்று மல்லுக் கட்டுவது ஏன் என்பது எனக்கு புரியவில்லை.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீர உணர்வை பறைசாற்றும் கெத்தான விளையாட்டு மட்டும் அல்ல; நம் நாட்டு மாட்டினங்கள் அழியாமல் காத்திடும் பாரம்பரிய முறை. ஆனால், உச்ச நீதிமன்ற தடை காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது.

இந்திய நாட்டின் குடிமகனாக ஒவ்வொரு தமிழனும் நீதித்துறையை மதிக்கத்தான் செய்கிறான். ஆனால், அது தமிழ் கலாச்சாரத்தை மீறிய மதிப்பாக இருக்காது, இருக்கவும் முடியாது. நமது கலாச்சாரத்துக்கு எதிராக திணிக்கப்படும் எந்தச் சட்டமும் நமது தேசத்தின் இறையாண்மையை பாதிக்கும் என்பதை சம்பந்தபட்டவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன். தனி ஒரு எஸ்டிஆராக மட்டுமே இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த மண்ணின் மைந்தனாக, இந்த மண்ணின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றும் ஒரு கடைநிலை தூதுவனாகக் கூட என் கருத்தை உரக்கத் தெரிவிக்கிறேன்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு விழாவை நடத்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனம் காட்டாமல் ஜல்லிக்கட்டு நடத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் வணங்கும் தமிழ்க் கடவுளின் அருளால் வருகின்ற தைப் பொங்கல் திருநாளில் நமது பாரம்பரியம் மீட்டெடுக்கப்பட்டு, நமது கலாச்சார அங்கீகாரம் மீண்டும் வெளிப்படுத்தப்படும் நம்புகிறேன். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை ஓயக் கூடாது. இது நம்மொழி, நம் கலாச்சாரம், நம் பாரம்பரியம் எவருக்கும் எப்பொழுதும் வீட்டுக் கொடுக்க மாட்டோம்."

இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.

More News

Breaking ! Mani Ratnam – Karthi 'Kaatru Veliyidai' teaser release date here

The teaser of one of the most awaited films of 2017, ‘Kaatru Veliyidai’ will be released on New Year Day the 1st of January 2017...

அனைத்து வங்கிகளுக்கும் ஆர்பிஐ-யின் புதிய உத்தரவு

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை அறிவித்தார்...

சென்னை எஸ்பிஐ வங்கியில் தீவிபத்து. வாடிக்கையாளர்களின் பணத்திற்கு பாதிப்பு வருமா?

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கிளையில் இன்று காலை 9 மணிக்கு திடீரென தீ விபத்து...

வாய்ப்பு கிடைத்தால் கருணாநிதியை சந்திப்பேன். நடிகர் ஆனந்த்ராஜ்

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் 12 ஆண்டுகாலமாக அதிமுகவில் இருந்த நிலையில் ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவில் இருந்து விலகினார்...

இளையதளபதியின் 'பைரவா'வில் இருந்து தொடங்கும் 2017 புத்தாண்டு

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படத்தின் டிரைலர் குறித்து செய்தி வெளியிடும் ஒருசில ஊடகங்கள் வரும் புத்தாண்டு...