தமிழகத்தில் ஊரடங்கு குறித்து நடிகர் சித்தார்த் கருத்து!
- IndiaGlitz, [Saturday,May 08 2021]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மே 10ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முழு ஊரடங்கு நடவடிக்கையை பலர் வரவேற்றும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் முழு ஊரடங்கிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம் என்றும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை இழந்து வருகிறோம் என்றும், மருத்துவர்களுக்கு ஆதரவு தருவோம் என்றும், பாதுகாப்பாக இருப்பதும் மற்றவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும், நாம் ஒன்றாக இருந்தால்தான் இந்த பெருந்தொற்றை சமாளிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சித்தார்த்தின் இந்த டுவிட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் முதல் அலையின்போது மத்திய அரசும் முந்தைய அதிமுக அரசும் ஊரடங்கு அறிவித்த போது அமைதியாக இருந்த சித்தார்த், தற்போது மட்டும் ஆதரவு தெரிவிப்பது ஏன் என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் அதிகம் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Welcome the complete #TamilNadulockdown by CM @mkstalin
— Siddharth (@Actor_Siddharth) May 8, 2021
We are in grave danger and have so far been losing the fight against COVID. Let's support our doctors.
It's up to each and every one of us to stay safe and keep others safe. Together we can overcome these hardships. ❤️