தமிழ் நடிகரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை: போலீசார் விசாரணை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தம் உள்பட பல்வேறு காரணங்களால் சின்னத்திரை மற்றும் சினிமா நட்சத்திரங்களின் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரு தமிழ் நடிகரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
‘யாகாவாராயினும் நா காக்க' என்ற படம் உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் துணை நடிகர் சித்தார்த். இவரும் இவருடைய மனைவி ஸ்மிரிஜாவும் நேற்றிரவு ஒரு ஓட்டலுக்குக் சாப்பிட சென்றுள்ளனர். அதன்பின்னர் வீடு திரும்பும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பியதும் ஸ்மிரிஜா கோபமாக தனது அறையில் சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டார். இதனையடுத்து சித்தார்த் வீட்டின் ஹாலில் படுத்து கொண்டார். இன்று காலை வெகுநேரம் ஆகியும் ஸ்மிரிஜா அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த சித்தார்த் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் கதவை உடைத்து பார்த்தபோது ஸ்மிரிஜா தூக்கில் தொங்கியதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சித்தார்த்-ஸ்மிரிஜா திருமணம் நடந்து மூன்று வருடங்கள் மட்டுமே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout