2ஜி வழக்கின் தீர்ப்பும், சித்தார்த்தின் 'திருட்டுப்பயலே' டுவீட்டுக்களும்
Send us your feedback to audioarticles@vaarta.com
2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியாகி ஆ.ராசா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை என்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் கேலியும் கிண்டலும் கலந்த கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
"சூப்பர் ஹிட் என்ற செய்தி வந்துள்ளது. அனைவருக்கும் விடுதலை. என் இந்தியாவே சிறந்தது. இந்திய அரசியலின் தூய்மையான குற்றமற்ற தன்மைக்கு என் வாழ்த்துகள். எவ்வளவு நற்குணம். இனி 2ஜி கிடையாது. தேசிய கீதம் ஒலிக்கிறது. எழுந்து நில்லுங்கள்" என்று சித்தார்த் பதிவு செய்துள்ளார்.
முன்னதாக இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சித்தார்த், '“ராசா, கனிமொழி நடித்த ‘திருட்டுப்பயலே 1’ விமர்சனம் இன்று வெளியாகிறது. இருவருக்கும் வாழ்த்துகள். ஜெ.ஜெயலலிதா, சசி மற்றும் குழுவினர் நடித்த ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரிசல்ட்டும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். #தமிழன்டா” என தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால் தீர்ப்பு வந்த பின்னர் இந்த டுவீட்டை நீக்கிவிட்டு மேலே கூறிய புதிய டுவீட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Super hit report. All acquitted. Mera Bharat Mahaan. Congrats to the pure innocence of Indian politics. Such goodness. No more #2G Please stand for national anthem.
— Siddharth (@Actor_Siddharth) December 21, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments