2ஜி வழக்கின் தீர்ப்பும், சித்தார்த்தின் 'திருட்டுப்பயலே' டுவீட்டுக்களும்

  • IndiaGlitz, [Thursday,December 21 2017]

2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியாகி ஆ.ராசா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை என்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் கேலியும் கிண்டலும் கலந்த கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஹிட் என்ற செய்தி வந்துள்ளது. அனைவருக்கும் விடுதலை. என் இந்தியாவே சிறந்தது. இந்திய அரசியலின் தூய்மையான குற்றமற்ற தன்மைக்கு என் வாழ்த்துகள். எவ்வளவு நற்குணம். இனி 2ஜி கிடையாது. தேசிய கீதம் ஒலிக்கிறது. எழுந்து நில்லுங்கள் என்று சித்தார்த் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக இந்த வழக்கின் தீர்ப்பு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சித்தார்த், '“ராசா, கனிமொழி நடித்த ‘திருட்டுப்பயலே 1’ விமர்சனம் இன்று வெளியாகிறது. இருவருக்கும் வாழ்த்துகள். ஜெ.ஜெயலலிதா, சசி மற்றும் குழுவினர் நடித்த ‘திருட்டுப்பயலே 2’ படத்தின் ரிசல்ட்டும் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். #தமிழன்டா” என தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால் தீர்ப்பு வந்த பின்னர் இந்த டுவீட்டை நீக்கிவிட்டு மேலே கூறிய புதிய டுவீட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

More News

தல தோனியை இயக்கும் 'நான்', 'எமன்' இயக்குனர் ஜீவாசங்கர்

விஜய் ஆண்டனியை நடிகராக 'நான்' படத்தில் அறிமுகம் செய்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா சங்கர், பின்னர் மீண்டும் விஜய் ஆண்டனியுடன் இணைந்து 'எமன்' என்ற படத்தை இயக்கினார்

மறைந்த பிரபல தமிழ் கவிஞருக்கு சாகித்ய அகாதமி விருது

சாகித்ய அகாதமி விருது என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் பிரபல எழுத்தாளர் யூமா வாசுகி

ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு: எந்த நாளில் எந்த மாவட்ட ரசிகர்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் 31ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாக ரசிகர்களை சந்திக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

தினமும் 20 மணி நேரம் கமல் வேலை செய்வது ஏன் தெரியுமா?

கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் இருந்து கொண்டு 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகளை செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

2ஜி தீர்ப்பு எதிரொலி: கனிமொழிக்கு புதிய பதவி தர ஆலோசனை

இன்று காலை வெளிவந்த 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பில் கனிமொழி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதால்