close
Choose your channels

அமெரிக்க அதிபரை கலாய்த்த தமிழ் நடிகர்

Tuesday, July 24, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் ஒருசில தமிழ் நடிகர்களில் சித்தார்த்தும் ஒருவர். ஜல்லிக்கட்டு முதல் ஸ்டெர்லைட் வரை சமூக பிரச்சனைகளையும் திரையுலகினர் குறித்தும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து சொல்வதுண்டு. அவரது ஒவ்வொரு பதிவும் நக்கலுடன் இருப்பதால் அவரது ஃபாலோயர்களின் எண்ணிக்கை சுமார் 4 மில்லியனாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அதிபருக்கு எச்சரிக்கை விடும் வகையில் ஒரு டுவீட்டை பதிவு செய்திருந்தார். அந்த பதிவில், 'அமெரிக்காவை மீண்டும் மிரட்ட எந்த நாடாவது முயற்சித்தால் அந்த நாடு வரலாற்றில் இதுவரை சில நாடுகள் அடைந்த வேதனையைவிட அதிகமாக எதிர்கொள்ள நேரிடும். வன்முறை மற்றும் மரணங்களை காட்டி நீங்கள் மிரட்டுவதை பொறுத்துக்கொள்ளும் நாடாக அமெரிக்கா இனி ஒருபோதும் இருக்காது. எச்சரிக்கை' என்று பதிவு செய்துள்ளார். மேலும் டிரம்பின் இந்த பதிவு ஆங்கிலத்தில் முழுக்க முழுக்க கேபிடல் லெட்டரில் இருந்தது.

இதுகுறித்து சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'உங்களுடைய கேப்ஸ் லாக் பட்டன் ஆன் ஆகியிருக்கிறதுடா’ என்று கிண்டலுடன் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment