சமூக வலைத்தளங்களில் குரல் கொடுக்காதது ஏன்? நடிகர் சித்தார்த் விளக்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,May 31 2023]

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருவார் என்பதும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தவறுகளை சுட்டி காட்டுவார் என்பதும் தெரிந்ததே. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுப்பதில்லை என்றும் அமைதியாகிவிட்டார் என்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு நடிகர் சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார். ’சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தது உண்மைதான், ஆனால் இப்போது என்னை நம்பி தயாரிப்பாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்து உள்ளார்கள், அதனால் நான் தற்போது அமைதியாகிவிட்டேன்.

சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது முக்கிய நோக்கம், அதனால் தான் சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் டிஸ்கஷனில் நான் கலந்து கொண்டேன், ஆனால் அந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மணிரத்னத்திடம் கேட்கும் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை என்றும் சித்தார்த் கூறினார்.

இந்த நிலையில் சித்தார்த் நடித்துள்ள ’டக்கர்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 9ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

படம் பார்க்காமலே பிரச்சார படம் என்பதா? கமலுக்கு பதிலடி கொடுத்த 'தி கேரளா ஸ்டோரி' இயக்குனர்..!

சமீபத்தில் 'தி கேரளா ஸ்டோரி' என்ற படத்தை விமர்சனம் செய்த உலகநாயகன் கமல்ஹாசன் 'நான் பிரச்சார படங்களை எதிர்ப்பவன் என்றும் உண்மை கதை என்று டைட்டில் இருந்தால் மட்டும் பத்தாது,

பிகினி உடையில் வேற லெவல் போட்டோஷூட்.. ரஜினி, அஜித் பட நாயகியின் வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜித் ஆகியோர்களின் படங்களில் நாயகியாக நடித்த நடிகையின் பிகினி காஸ்ட்யூம் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர்களுக்கு இணையாக அதிக சம்பளம் வாங்குகிறேன்... பெருமைபட்ட 'தலைவி' பட நடிகை!

இந்திய அளவில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை கங்கனா ரனாவத் தனது சம்பள விஷயத்தைக் குறித்து கருத்துப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

40 வயதா இவருக்கு? 'சிவாஜி' பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை ஸ்ரேயா சரண் தனது லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

83 வயதில் 29 வயது காதலி மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பிரபல நடிகர்!

காட்ஃபாதர் திரைப்படத்தில் நடித்து உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஒருவர் 83 வயதில் 29 வயது காதலியோடு இணைந்து குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கிறார்.