கூட்டம் கூடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பந்தம் இல்லை: 'புஷ்பா 2' குறித்து தமிழ் நடிகர்..!

  • IndiaGlitz, [Tuesday,December 10 2024]

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா 2’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவரும் நிலையில், கூட்டம் போடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லை என ’புஷ்பா 2 ’படம் குறித்து தமிழ் நடிகர் ஒருவர் விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சித்தார்த் சமீபத்தில் அளித்த பேட்டியில், அல்லு அர்ஜுனுக்கு கூடிய கூட்டம் மற்றும் ’புஷ்பா 2 ’ படத்தை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளர், ’அல்லு அர்ஜுனை பார்க்க பாட்னாவில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூட்டியிருந்தது என்று கேட்டதற்கு, கூட்டம் போடுவதெல்லாம் ஒரு விஷயமா? அதுவும் இந்தியாவில் ஜேசிபியை கொண்டு வந்து நிறுத்தினால் கூட கூட்டம் கூடிவிடும். பீகாரில் கூட்டம் கூடுவது பெரிய விஷயம் இல்லை. இந்தியாவில் கூட்டம் கூடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லை.

அப்படி பார்த்தால் எல்லா அரசியல் கட்சிக்கும் கூட்டம் கூடுகிறது, எல்லா அரசியல் கட்சியும் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டுமே. எங்கள் காலத்தில் சொல்வதென்றால், பிரியாணிக்கும் குவாட்டர் பாட்டிலுக்கும் கூட கூட்டம் கூடும். என்று சொல்வார்கள்’ என்று கூறினார்.

எல்லோருக்கும் தான் கூட்டம் கொடுக்கிறது என்று பேசி இருக்கும் சித்தார்த்தின் இந்த கருத்து, அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கோபமாக பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

மகன், மருமகளால் எனக்கு ஆபத்து: காவல்துறையில் புகார் அளித்த மோகன்பாபு..!

மகன் மற்றும் மருமகளால் தனக்கு ஆபத்து என்று தனக்கும் தன்னுடைய வீட்டிற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நடிகர் மோகன் பாபு காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது

எண்களின் ரகசியம்: உங்கள் வாழ்க்கையை மாற்றும் நியூமராலஜி

ஆன்மீக கிட்ஸ் சேனலில் நியூமராலஜி நிபுணர் எழிலரசன் அவர்கள் எண்களின் மர்ம உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.

விஜய் சேதுபதி இல்லாத அவருடைய படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ.. இணையத்தில் வைரல்..!

விஜய் சேதுபதி நடித்த அடுத்த படத்தின் நாயகியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து, அது குறித்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

விஜய் - ஆதவ் அர்ஜூனா சந்திப்பு நடக்க போகிறதா? தமிழக அரசியலில் பரபரப்பு..!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை சந்திக்க இருப்பதாக கூறப்படுவது

'தொடங்கலாமா? 'எதிர்நீச்சல் 2' டீசர் வீடியோ.. ஜனனி கேரக்டரில் யார்?

சன் டிவியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்' என்பதும், இந்த சீரியல் 2022 ஆம் ஆண்டு ஆரம்பித்து சுமார் 700 எபிசோடுகளுக்கும் அதிகமாக ஒளிபரப்பான