டிஜிட்டல் நிறுவனங்கள் சின்ன படங்களுக்கு கிடைத்த வரம்: பிரபல நடிகர்
- IndiaGlitz, [Tuesday,May 22 2018]
கோலிவுட் திரையுலகில் சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. சரியான தேதி கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் நல்ல திரையரங்க்குகள் கிடைப்பதில்லை. இந்த நிலையில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு கிடைத்த தற்போது டிஜிட்டல் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறியுள்ள நடிகர் சித்தார்த், 'சினிமாவில் தற்போது சிறிய நிறுவனங்களின் படங்கள் வெளியாக போராடி வருகின்றன. அவர்களுக்கு கிடைத்த ஒரு வரமாக சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமைகள் உள்ளன.
நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இளம் திறமையுள்ள கலைஞர்களின் படைப்புகளுக்கு மதிப்பளித்து அவர்களுடைய திரைப்படங்களுக்கு அங்கீகாரம் கொடுக்க தொடங்கியுள்ளன. இதுவொரு நல்ல ஆரம்பம். இது நடக்கவில்லை என்றால் டிஜிட்டலிலும் ஒரே மாதிரியான கமர்ஷியல் படங்களையே பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஹாலிவுட் போல இந்தியாவிலும் நல்ல படங்களுக்கு டிஜிட்டல் நிறுவனங்கள் ஆதரவு அளிப்பது திரையுலகிற்கு ஆரோக்கியமானதாக அமையும் என்று கூறியுள்ளார்.