24 மணி நேரத்தில் 500 மிரட்டல்கால்கள்: தமிழ் ஹீரோ அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 24 மணி நேரத்தில் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்கும் 500க்கும் மேற்பட்ட மிரட்டல் கால்கள் வந்திருப்பதாக தமிழ் ஹீரோ ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் நடிகர் சித்தார்த் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய தொலைபேசி எண்ணை பாஜகவின் ஐடி பிரிவினர் வெளியிட்டதாகவும் இதனால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் கால்கள் வருவதாகவும் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 500 மிரட்டல் கால்கள் வந்து இருப்பதாகவும் அதில் பாலியல் வன்முறை, கொலை மிரட்டல் உள்ளிட்ட மிரட்டல்கள் அடங்கும் என்றும், கடந்த 24 மணிநேரத்தில் தனக்கும் தன்னுடைய குடும்ப உறுப்பினருக்கும் 500க்கும் மேற்பட்ட மிரட்டல் கால்கள் அனைத்தும் ரெக்கார்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவை அனைத்தும் காவல்துறை வசம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சித்தார்த்தின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
My phone number was leaked by members of TN BJP and @BJPtnITcell
— Siddharth (@Actor_Siddharth) April 29, 2021
Over 500 calls of abuse, rape and death threats to me & family for over 24 hrs. All numbers recorded (with BJP links and DPs) and handing over to Police.
I will not shut up. Keep trying.@narendramodi @AmitShah
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com