திருடனை திட்டினால் தவறா? சித்தார்த்

  • IndiaGlitz, [Tuesday,January 09 2018]

நேற்று நடிகர் சித்தார்த் ஆன்லைன் பைரசியை ஆதரவு தெரிவித்த ஒரு ரசிகரை தனது டுவிட்டரில் திட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  'அவள்' படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பார்த்து கொள்கிறோம் என்று கூறிய ரசிகரை ‘உங்க மூஞ்சியெல்லாம் எங்க படத்தை காசு கொடுத்து பார்த்தா அதில் நடித்த எங்களுக்குத் தான் அசிங்கம்.. என்று திட்டியிருந்தார். இதற்கு ரசிகர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் இன்று மீண்டும் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் காட்டமான கருத்தை சித்தார்த் தெரிவித்துள்ளார். 'பைரசி என்பது ஒரு குற்றம். அதை ஆதரிப்பது தவறு. டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது சரியா? முட்டாள்தனம்.. திருடனை திட்டினா தப்பு, திருட்டை பாத்து கொண்டாடுற மூஞ்ச திட்டினா தப்பு! மற்றவர்கள் சினிமாக்காரர்களை அவமானபடுத்தலாம், நாங்கள் திருப்பி பேசக் கூடாதா? என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

சித்தார்த்தின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தள பயனாளிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அரசு சொல்ற விலைக்கு டிக்கெட் விக்கறாங்களா...?? அதை உங்களால நிறுத்த முடியுதா..? அது திருட்டு இல்லியா..? என்றும், ஒரு படம் flop ஆச்சுனா, அதுக்கு பார்ட்டி வைக்கிற கலாச்சாரம் உங்க field லதான் இருக்கு ப்ரோ! அத நினைச்சா எங்களுக்கும் அசிங்கமாதான் இருக்கு! நீங்க முதல்ல பாண்டிச்சேரி ல கார் வாங்குன உங்க field ஆளுகளை நினைச்சு வெக்கப்படுங்க' என்றும் டுவிட்டர் பயனாளிகள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

More News

ஆதார் குறித்து இன்னொரு அதிர்ச்சி தகவல்

ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்கள் பாதுகாப்பாக இல்லை என்றும், ரூ.500 கொடுத்தால் ஆதார் அட்டையில் உள்ள விபரங்கள் தெரிவிக்கப்படும் மற்றும் மாற்றப்படும்

'மன்னார் வகையறா' சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்கள்

கடந்த 2016ஆம் ஆண்டு விமல் நடித்த 'மாப்பிள்ளை சிங்கம்' படத்திற்கு பின்னர் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் விமல் படம் வெளியாகாத ஆண்டு 2017 மட்டுமே.

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்: எச்.ராஜா

எச்.ராஜா கடந்த சில மாதங்களில் ரஜினி, கமல், விஜய், விஷால் என திரையுலக பிரமுகர்களை அடுத்தடுத்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது அவருடைய பார்வை கவியரசு வைரமுத்துவின் மீது விழுந்துள்ளது.

தளபதி விஜய் இப்போது எங்கே இருக்கின்றார் தெரியுமா?

தளபதி விஜய் சமீபத்தில் குடும்பத்துடன் லண்டன் சென்ற நிலையில் தற்போது லண்டனில் இருந்து அவர் குடும்பத்துடன் சீனாவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதலமைச்சர் கொடுத்த முக்கிய பதவி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை ஆஸ்கார் விருது உள்பட பல்வேறு விருதுகள் தேடி வந்த நிலையில் தற்போது சிக்கிம் முதலமைச்சர் முக்கிய பதவியை அவருக்கு அளித்துள்ளார்.