திருடனை திட்டினால் தவறா? சித்தார்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடிகர் சித்தார்த் ஆன்லைன் பைரசியை ஆதரவு தெரிவித்த ஒரு ரசிகரை தனது டுவிட்டரில் திட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 'அவள்' படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் பார்த்து கொள்கிறோம் என்று கூறிய ரசிகரை ‘உங்க மூஞ்சியெல்லாம் எங்க படத்தை காசு கொடுத்து பார்த்தா அதில் நடித்த எங்களுக்குத் தான் அசிங்கம்.. என்று திட்டியிருந்தார். இதற்கு ரசிகர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் இன்று மீண்டும் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் காட்டமான கருத்தை சித்தார்த் தெரிவித்துள்ளார். 'பைரசி என்பது ஒரு குற்றம். அதை ஆதரிப்பது தவறு. டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது சரியா? முட்டாள்தனம்.. திருடனை திட்டினா தப்பு, திருட்டை பாத்து கொண்டாடுற மூஞ்ச திட்டினா தப்பு! மற்றவர்கள் சினிமாக்காரர்களை அவமானபடுத்தலாம், நாங்கள் திருப்பி பேசக் கூடாதா?" என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.
சித்தார்த்தின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தள பயனாளிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அரசு சொல்ற விலைக்கு டிக்கெட் விக்கறாங்களா...?? அதை உங்களால நிறுத்த முடியுதா..? அது திருட்டு இல்லியா..? என்றும், ஒரு படம் flop ஆச்சுனா, அதுக்கு பார்ட்டி வைக்கிற கலாச்சாரம் உங்க field லதான் இருக்கு ப்ரோ! அத நினைச்சா எங்களுக்கும் அசிங்கமாதான் இருக்கு! நீங்க முதல்ல "பாண்டிச்சேரி" ல கார் வாங்குன உங்க field ஆளுகளை நினைச்சு வெக்கப்படுங்க' என்றும் டுவிட்டர் பயனாளிகள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments