டாஸ்மாக்கையும் மூடுவீர்களா? ஐபிஎல் ரத்து குறித்து பிரபல நடிகர்
- IndiaGlitz, [Thursday,April 12 2018]
சென்னையில் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் புனே மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மைதானங்களுக்கு மாற்ற நேற்று ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்ததை அடுத்து ஐபிஎல் போட்டிகளுக்கு எதிரான அரசியல்கட்சிகளின் போராட்டம் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது. போட்டி இடமாற்றத்தை பெரிய வெற்றியாக கொண்டாடி வரும் அரசியல்வாதிகளுக்கு நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஐபிஎல் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது. வாழ்த்துக்கள். இதேபோல் டாஸ்மாக் கடைகளையும் மூடவும், அரசியல்வாதிகள் நடத்தி வரும் அனைத்து டிவி சேனல்களை மூடவும் போராடுவீர்களா? அதேபோல் காவிரி போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் தங்கள் கட்சியின் கொடியை தவிர்ப்பீர்களா? தமிழகத்தில் மக்களுக்கு சங்கடமான பல விஷயங்கள் நடக்கின்றன. ஒற்றுமையுடன் போராடுங்கள்' என்று கூறியுள்ளார்.
நடிகர் சித்தார்த்தின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. மொத்தத்தில் நான்கு மணி நேரம் மட்டுமே நடைபெறும் ஒரு போட்டியால் காவிரி போராட்டமே திசை திரும்பிவிடும் என்று ஒருசில அரசியல் கட்சிகள் கூறுவதை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றே தெரிகிறது.