இப்போது புரிகிறதா? ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் டுவிட்!

  • IndiaGlitz, [Monday,July 19 2021]

அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட சுமார் 300க்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக இன்று காலை வெளியான செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் ஒலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு நாங்கள் யாரையும் ஒட்டு கேட்க வில்லை என்றும் கூறியுள்ளது

இந்த இந்த ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பிரசாந்த் கிஷோர், திருமுருகன் உள்பட பலரது தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பதாக வெளி வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்

ஆரோக்கிய சேது போன்ற நம்பிக்கையற்ற செயலிகளை பயன்படுத்த மத்திய அரசு ஏன் வலியுறுத்தியது என இப்போது புரிகிறதா? என அவர் கேட்டுள்ளார். அவர்கள் எப்போதும் பொய் சொல்வார்கள், எப்போதும் உளவு பார்ப்பார்கள். எனவே ஏன் என கேட்க கற்றுக் கொள்ளுங்கள். அப்படி கேட்டால் தான் அவர்களிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்’ என்று கூறியுள்ளார் இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது.