இது சாதாரண நடிப்பில்லைடா சாமி, வேற லெவல் நடிப்பு: ரம்யாவை கலாய்த்த தமிழ் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெல்லும் திறமையை கொண்டவர்களில் ஒருவர் என்று கூறப்படும் ரம்யா குறித்து ’இவருடைய நடிப்பு சாதாரண நடிப்பு இல்லை கேலக்ஸி லெவல் நடிப்பு என்று தமிழ் நடிகர் ஒருவர் கலாய்த்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ரம்யா பாண்டியன் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு போட்டியாளரிடம் மாறி மாறி பேசி வருகிறார் என்பதை பார்வையாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக இந்த வார எவிக்ஷன் குறித்து அனிதாவிடம் பேசிய போது ஆரி தான் வெளியேறுவார் என்று கூறினார். ஆனால் அதே நேரத்தில் ஆரி இதுகுறித்து கேட்டபோது ’அனிதா அல்லது ஆஜித் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறினார். நேற்றைய நிகழ்ச்சியின் போது ஆரி சேவ் செய்யப்பட்டார் என்று கூறியவுடன் ’நான் தான் வெளியே போகிறேன் என்று அனிதா கூறியபோது ’அப்படி எல்லாம் இருக்காது’ என்று அனிதாவுக்கு ரம்யா ஆறுதல் கூறினார்
இவ்வாறு ஒவ்வொரு போட்டியாளரிடமும் மாறி மாறி ரம்யா கூறிக் கொண்டிருப்பதை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ஷிவகுமார் இதுகுறித்து கூறிய போது ’அனிதா கிட்ட நைட்டு சீக்ரெட்டா ஒரு பயங்கரமான தியரி சொல்லி ஆரி தான் எலிமினேட் ஆவார் என்று சொன்னாங்க, ஆரி கேட்கும்போது அனிதாதான் எலிமினேட் ஆவாங்க சொல்றாங்க. ஆனா நான்தான் இந்த வாரம் என அனிதா சொல்லும்போது ’நோ வே’ன்னு சொல்றாங்க. இது சாதாரண நடிப்பு இல்லடா சாமி, கேலக்ஸி வெவல் நடிப்பு என்று கூறியுள்ளார்
ஷிவகுமாரின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் மேலும் ’ரம்யா டபுள் இல்லை, ட்ரிபிள் ஸ்டாண்டர்ட்’ என்றும் நெட்டிசன்களும் சேர்ந்து கலாயத்து வருகின்றனர்
Idhu saathaarna nadippu illa daaa saamy!!! Galaxy level nadippu!! Galaxy level!! ???? #BiggBossTamil #BigBossTamil4 #snakebabu #ennasonnen
— Shiva Kumarr (@Shivakumarr222) December 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com