பின்லேடன் திருச்சிக்கு வரப் போறாராமே...

  • IndiaGlitz, [Thursday,March 31 2016]
உலக வல்லரசு நாடான அமெரிக்காவையே கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர் பின்லேடன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் வேட்டையாடப்பட்ட பின்லேடன் விரைவில் திருச்சிக்கு வரப்போறாராம்.

ஆம் அறிமுக இயக்குனர் அரவிந்த் என்பவர் இயக்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'பின்லேடன்'. பின்லேடன் திருச்சிக்கு வந்தால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்னாவாக இருக்கும் என்பதன் கற்பனையே இந்த படத்தின் கதையாம். முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து தயாராக இருக்கும் இந்த படத்தில் சிவா நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக மாயா நடிக்கவுள்ளார். பின்லேடன் பாத்திரத்திற்கு நடிகர் தேர்வு செய்யப்படவுள்ளதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இயக்குனர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் 'Tere Bin Laden' என்ற திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது. அந்த படத்தின் ரீமேக்தான் இந்த படமா? என்று இயக்குனர் அரவிந்திடம் கேட்டபோது அந்த படத்திற்கும் இந்த படத்திற்கு எவ்வித சம்பதமும் இல்லை என்றும் இது முழுக்க முழுக்க வித்தியாசமான படம் என்றும் கூறியுள்ளார்.

More News

ஸ்டார் கிரிக்கெட்: 8 அணிகளின் பெயர்கள் மற்றும் கேப்டன்கள் அறிவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்ட வரும் ஏப்ரல் 17ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 'ஸ்டார் கிரிக்கெட்' போட்டிகள் நடைபெறவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

விஜய்யின் 'தெறி'யில் உள்ளே நுழைந்தார் 'பருத்திவீரன்' அமீர்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளின் ரிலீஸ் உரிமைகளின் பிசினஸ் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில்...

விஜய்யின் 'தெறி'யில் மகேந்திரன் கேரக்டர் என்ன தெரியுமா?

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குனர் அட்லி இயக்கிய 'தெறி' படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக விஜய் நடித்துள்ளார் என்பதும், டாக்டர் கேரக்டரில்...

விஜய் வடிவில் ரஜினியை பார்க்கின்றேன். இயக்குனர் மகேந்திரன்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது...

'தெறி'யை கேரளாவில் ரிலீஸ் செய்கிறது பிரபல நடிகையின் நிறுவனம்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் கேரள மாநில உரிமையை 'ஆகஸ்ட் சினிமாஸ்' என்ற நிறுவனம் பெற்றதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமை மற்றொரு பிரபல நடிகை மற்றும் நடிகர் இணைந்து நடத்தி வரும் நிறுவனத்திற்கு கைமாறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது...