7வது திருமண நாள்.. மறைந்த நடிகர் சேதுராமன் மனைவியின் நெகிழ்ச்சியான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் மருத்துவர் சேதுராமன் கடந்த 2000 ஆண்டு உயிரிழந்த நிலையில் அவருடைய மனைவி தனது திருமண நாளை ஒட்டி செய்துள்ள நெகிழ்ச்சியான பதிவு வைரல் ஆகி வருகிறது.
‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்த சேதுராமன், நடிகர் மட்டுமின்றி ஒரு மருத்துவர் என்பதும் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது கடந்த 2000 ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேதுராமன் மரணம் அடைந்தபோது அவரது மனைவி உமா கர்ப்பமாக இருந்தார் என்பதும், அதன் பிறகு அவருக்கு மகன் பிறந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சேதுராமன் - உமா தம்பதிக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் சேதுராமன் மறைவிற்கு பின்னர் தனது இரண்டு குழந்தைகளுக்காகவே அவர் வாழ்ந்து வருவதாக பலமுறை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தங்களுடைய 7வது திருமணநாள் குறித்து நெகிழ்ச்சியாக உமா பதிவு செய்துள்ளார். ஏழு வருடங்கள் நான் பின்னோக்கி இந்த நாளை பார்க்கிறேன். இந்த நாளை நினைக்கும் போதெல்லாம் நமது காதல் உணர்வு அப்படியே இருக்கிறது. இந்த நாளை நாங்கள் கொண்டாடியதே இல்லை, அவ்வாறு கொண்டாடுவதில் அவருக்கு நம்பிக்கையும் இல்லை. ஆனால் நான் ஒவ்வொரு வருடமும் எனது உணர்வை வெளிப்படுத்தி வருகிறேன், அந்த நினைவுகளை நான் நேசிப்பேன், வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நான் செய்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments