close
Choose your channels

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் செந்திலின் வீடியோ வைரல்!

Wednesday, April 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காமெடி நடிகர் செந்தில் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் கொரொனாவால் பாதிக்கப்பட்ட செந்தில் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக இருக்கின்றேன். கொரோனா வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை. டெஸ்ட் எடுத்து விட்டு வீட்டில் நீங்கள் தனிமைப்படுத்தி கொண்டு டாக்டர்கள் சொன்ன மருந்து மாத்திரைகளை சரியாக சாப்பிடுங்கள்

எனக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால்ல் அதிக அளவு பாதிப்பு இல்லை, எனவே நீங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அந்த ஊசியை போட்டுக் கொண்டால் அனைவருக்கும் நல்லது

அடுத்த டெஸ்ட் விரைவில் எடுக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். டெஸ்ட் எடுத்து முடித்தவுடன் வீட்டிற்கு செல்லலாம் என்றும் அதன்பின் வீட்டில் இருந்தே சிகிச்சையை தொடரலாம் என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள். எனவே என்னை பற்றி யாரும் பயப்பட வேண்டாம்’ என்று அந்த வீடியோவில் நடிகர் செந்தில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment