எஸ்பிபியுடன் விடிய விடிய பேசினேன்: நடிகர் செந்திலின் மலரும் நினைவுகள்
- IndiaGlitz, [Saturday,September 26 2020]
பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவரகள் நேற்று காலமான நிலையில் அவருடன் பழகிய நாட்களை திரையுலக பிரமுகர்கள் பகிர்ந்து கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் செந்தில் வீடியோ ஒன்றில் கூறியதாவது:
அண்ணன் எஸ்பிபி பாலசுப்பிரமணியம் அவர்கள் இருந்தார், இன்று மறைந்தார். ஆனால் அவர் பாட்டு மட்டும் மறையவில்லை. அதை காலங்காலமாக கேட்டுக் கொண்டே இருக்கலாம்
அவர் கிட்டத்தட்ட 42 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். பல விருதுகளை வாங்கியிருக்கிறார். கடந்த 86 மற்றும் 87களில் சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொண்டோம். அவர் பாட்டு பாடினார், நான் காமெடி செய்தேன். அன்று இரவு நாங்கள் ஒரே அறையில் சாப்பிட்டுவிட்டு அவருடன் அதிகாலை நான்கு மணி வைரை விடிய விடிய பேசிக்கொண்டிருந்தேன். அதன்பின்னர் தான் தூங்க சென்றோம். அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது
அது மட்டுமல்ல அவர் வாழும் காலத்தில் இளையராஜா காம்பினேஷனுடன் பாடிய பாடல்களை இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அனைவருடனும் நன்றாக பழகும் தன்மை உடையவர். நாமும் அவரைப்போல் நடந்துகொள்ள வேண்டும்
மேலும் தமிழக அரசு அவரது உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அனுமதி தந்து உள்ளது அதற்காக நான் தமிழக அரசுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அவர் குடும்பத்தாருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு நடிகர் செந்தில் கூறியுள்ளார்.
Actor senthil condolence message on our legendary singer actor #SPBalasubramaniam sir's demise. #SPBLivesOn #SPBForever #SPBalu pic.twitter.com/FSMbcgTBnL
— RIAZ K AHMED (@RIAZtheboss) September 26, 2020