வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நடிகர் செந்தில்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியா மற்றும் சீன எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் நடந்த இந்திய, சீன ராணுவ வீரர்களிடையேயான மோதலில் இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் செந்தில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி உள்பட 20 ராணுவ வீரருக்கும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:
சீன எல்லைக்கும் இந்திய எல்லைக்கும் இடையே ஒரு தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் சில பேர் மரணம் அடைந்தனர். சிலபேர் காயம் அடைந்தனர். அதில் நமது தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுரம் ஜில்லாவை சேர்ந்த பழனி என்பவர் வீரமரணம் அடைந்துள்ளார். பல ஆண்டுகாலம் நமது ராணுவத்தில் பணியாற்றிய அவர் தற்போது வீரமரணம் அடைந்துள்ளார். அவருடைய குடும்பத்தார்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு நடிகர் செந்தில் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்திய எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டின் நம் ராணுவ வீரர் திரு பழனி அவர்களுக்கு வீர வணக்கம் - நடிகர் செந்தில் pic.twitter.com/43uuEI4Q6K
— Diamond Babu (@idiamondbabu) June 19, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments