பிரபல நகைச்சுவை நடிகருக்க்கு அதிமுகவில் புதிய பதவி
- IndiaGlitz, [Saturday,August 26 2017]
அதிமுகவில் இருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர் மூன்றாவது அணியாக செயல்பட்டு வரும் தினகரன் அணியினர், அதிமுகவின் இரு அணி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவினர்களில் சில பதவிகளையும் தினகரன் நீக்கி வருகிறார்.
இந்த நிலையில் இன்று தினகரன், அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்த, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை திடீரென நீக்கி, அவருக்கு பதிலாக நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களை அந்த பதவிக்கு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கோகுல இந்திர மட்டுமின்றி மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா, அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன், இளைஞர் பாசறை துணைத் தலைவர் கே.சி. விஜய், இலக்கிய அணி இணைச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர்களும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத்தின் இணைச் செயலாளராக கோனேஸ்வரன், புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்களாக மணிகண்டராஜா, ஜெயராஜ், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர்களாக ராமலிங்கம் ஜோதி, சங்கர், முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, மகளிர் அணி இணைச்செயலாளராக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெயராஜ் மற்றும் இளைஞர் பாசறை செயலாளராக கே.சி. விஜய் நியமிக்கப்பட்டுள்ளனர்.