ரஜினி படத்தை தயாரிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது: நடிகர் செந்தில் கூறிய ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,January 30 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை தயாரிக்க எனக்கு வாய்ப்பு வந்தது என்றும் ஆனால் நான் தான் அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றும் சமீபத்தில் நடிகர் செந்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் செந்தில் என்பதும் இருவரும் இணைந்து செய்த காமெடிகள் கலக்கலாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. மேலும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘லால்சலாம்’ படத்தில் கூட ரஜினியுடன் செந்தில் நடித்திருக்கிறார் என்பதும் இந்த படத்தில் அவருடன் மீண்டும் இணைந்து நடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ’ரஜினி படத்தை தயாரிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாக கூறியுள்ளார். ’ரஜினி தன்னை கூப்பிட்டு நான் கால்சீட் தருகிறேன் நீங்கள் என்னை வைத்து ஒரு படம் தயாராயுங்கள் என்று கூறியதாகவும் ஆனால் ’இல்லை சார், வேண்டாம், எனக்கு உங்களுடன் நடிப்பதே போதும்’ என்று அவரிடம் கூறிவிட்டேன் என்றும் தெரிவித்தார்.

ரஜினி படத்தை மட்டும் நான் தயாரித்திருந்தால் மிகப்பெரிய பணக்காரராகி இருக்கலாம் என்றும் ஆனால் எனக்கு அந்த எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ரஜினி கால்ஷீட் தருகிறேன் என்று கூறியும் செந்தில் அதை வேண்டாம் என கூறியுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

எதை தேர்வு செய்வது என்பதை புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள்: பிக்பாஸ் அர்ச்சனாவின் போட்டோஷூட்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'எதை தேர்வு செய்வது என்பதை புத்திசாலித்தனமாக நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்'

'விடுதலை' 2 பாகங்களும் சேர்த்து ரிலீஸ்.. வெற்றிமாறனின் மாஸ் பிளான்.. டிக்கெட்டுக்கள் முன்பதிவு..

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்த 'விடுதலை' திரைப்படம் கடந்த ஆண்டு  மார்ச் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம்

உறைபனியில் ஜோதிகாவுடன் ரொமான்ஸ் மூடில் சூர்யா.. லவ்லி வீடியோ வைரல்..!

 தமிழ் திரை உலகின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான சூர்யா - ஜோதிகா ஜோடி உறைபனியில்  ரொமான்ஸ் மூடில் இருக்கும் வீடியோ அவர்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்

பாடகர்களின் குரலை AI மூலம் பயன்படுத்திய விவகாரம்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் மறைந்த பழம்பெரும் பாடகர்களின் குரலை AI மூலம் ஏஆர் ரஹ்மான் பயன்படுத்திய நிலையில்  பாடகர்களின் குரலை

விஜய் ஆரம்பிக்கும் கட்சியின் பெயர் இதுவா? முழு விவரங்கள் எப்போது?

 நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சியின் பெயர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்து வருகிறது.