80-90 களின் முன்னணி நகைச்சுவை நடிகர் பா.ஜ.கவில் இணைந்தார்!
- IndiaGlitz, [Thursday,March 11 2021]
தமிழ் சினிமாவில் கடந்த 80-90 களில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில். அதோடு கவுண்டமணியோடு இவரின் கூட்டணியை விரும்பாத ரசிகர்களே இல்லை எனும் அளவிற்கு இந்தக் கூட்டணி சக்கைப் போடு போட்டது. இப்படியொரு அடையாளத்துடன் விளங்கி வந்த நடிகர் செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு படத்தின் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் முன்னதாக அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக பொறுப்பு வகித்து வந்த நடிகர் செந்தில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அமமுகவில் தன்னை இணைத்து கொண்டார். பின்பு அக்கட்சியின் அமைப்பு செயலாளராகவும் உயர்வு பெற்றார். ஆனால் தன்னுடைய பொறுப்பில் கவனம் செலுத்தவில்லை என அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தற்போது நடிகர் செந்தில் பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். அதிமுக, அமமுக எனத் தொடர்ந்து தற்போது நடிகர் செந்தில், பா.ஜ.கவில் இருந்துள்ளா. இந்நிகழ்வின் போது அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில பொதுச் செயலாளர் திரு.கே.டி.ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.