80-90 களின் முன்னணி நகைச்சுவை நடிகர் பா.ஜ.கவில் இணைந்தார்!

  • IndiaGlitz, [Thursday,March 11 2021]

தமிழ் சினிமாவில் கடந்த 80-90 களில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில். அதோடு கவுண்டமணியோடு இவரின் கூட்டணியை விரும்பாத ரசிகர்களே இல்லை எனும் அளவிற்கு இந்தக் கூட்டணி சக்கைப் போடு போட்டது. இப்படியொரு அடையாளத்துடன் விளங்கி வந்த நடிகர் செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு படத்தின் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் முன்னதாக அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக பொறுப்பு வகித்து வந்த நடிகர் செந்தில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அமமுகவில் தன்னை இணைத்து கொண்டார். பின்பு அக்கட்சியின் அமைப்பு செயலாளராகவும் உயர்வு பெற்றார். ஆனால் தன்னுடைய பொறுப்பில் கவனம் செலுத்தவில்லை என அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தற்போது நடிகர் செந்தில் பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் தலைமையில் பா.ஜ.கவில் இணைந்துள்ளார். அதிமுக, அமமுக எனத் தொடர்ந்து தற்போது நடிகர் செந்தில், பா.ஜ.கவில் இருந்துள்ளா. இந்நிகழ்வின் போது அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.டி.ரவி,  மாநில பொதுச் செயலாளர் திரு.கே.டி.ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நான் இப்போது அந்த மனநிலையில் இல்லை: பிக்பாஸ் ஷிவானியின் க்யூட் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் தினமும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை பரபரப்பை ஏற்படுத்தியவர் ஷிவானி என்பது தெரிந்ததே

ஒரே வருடத்தில் மூன்று விஜய் படங்கள் ரிலீஸா?

தளபதி விஜய் நடித்த திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகாத நிலையில் இந்த ஆண்டு அவர் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது.

'தளபதி 65' படத்திற்காக இத்தனை நாள் கால்ஷீட் கொடுத்தாரா பூஜா ஹெக்டே?

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கவுள்ள 'தளபதி 65' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே

தேர்தல் துளிகள்: 11 மார்ச் 2021

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆட்சியில் இருந்துவந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இறுதி நேரத்தில் கலைக்கப்பட்டது.

குவிந்து கிடக்கும் தங்கம்… குஷியில் கூட்டம் கூட்டமாக அள்ளிச் செல்லும் மக்கள்… அதிர்ச்சி வீடியோ!

தங்கத்தின் விலை உச்சியைத் தொட்டு இருக்கும்போது, ஒரு மலை முழுக்க தங்கம் கொட்டிக் கிடக்கிறது