நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிகர் செந்தில்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,September 03 2021]

கடந்த 1980 ஆம் ஆண்டில் இருந்து 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில் என்பது தெரிந்ததே. குறிப்பாக கவுண்டமணியுடன் செந்தில் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் என்பதும் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் செந்தில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் என்பதும் இருப்பினும் சூர்யா நடித்த ’தானா சேர்ந்த கூட்டம்’ உள்பட ஒருசில படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிகர் செந்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளர. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்த படத்தில் நடிகர் செந்தில் தனது பகுதிக்கான டப்பிங் பணியை முடித்து உள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என இயக்குனர் சுரேஷ் சங்கையா தெரிவித்துள்ளார்.
 

More News

கரகாட்டக்காரன் பட நடிகை கனகாவா இவங்க? வைரல் வீடியோ

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் கனகா கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான 'கரகாட்டக்காரன்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படம் சூப்பர் ஹிட்டானதை

விஜய், கார்த்தி நாயகி ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான 'மின்னலே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். அதன் பின்னர் தளபதி விஜய்யின் 'பகவதி'

அகல்யா வெங்கடேசன்: ரீஎண்ட்ரிக்கு முன்பே வைரலாகும் வடிவேலு வீடியோ!

வைகைப்புயல் வடிவேலு கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார் என்பதும், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டதை

போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கிய பிரபல தமிழ் நடிகைகள்?

கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் விவகாரத்தில் திரையுலக பிரபலங்கள் சிக்கி வருவது தொடர்கதையாகி வருவது தெரிந்ததே. பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோர்

82 வயதில் விஷால் தந்தைக்குக் கிடைத்த பெருமைக்குரிய பதவி!

பிரபல நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி அவர்களுக்கு 82 வயதில் பெருமைக்குரிய பதவி கிடைத்தது குறித்து விஷால் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.